நாங்குநேரி அருகே பூக்குழி இறங்குவதில் மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு
நாங்குநேரி: நாங்குநேரி அருகே உள்ள சூரக்குடியில் நடந்த கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் 6 பேருக்கு அரிவாள் வெட்டி விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாங்குநேரி அருகே உள்ள சூரக்குடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவுக்காக முத்து விநாயகர் தசரா குழு சார்பாக பூக்குழி இறங்கும் விழா நேற்று இரவு நடந்தது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்குவார்கள். நேற்றிரவு நடந்த விழாவுக்கும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள் ஆட்டோ, கார், வேனில் வந்து கூடியிருந்தனர்.
கோவிலில் சிறப்பு பூஜைகள் முடிந்து பூக்குழி இறங்கும்போது சூரங்குடி பக்தர்கள் நாங்கள் தான் முதலில் இறங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் கடம்போடுவாழ்வு பகுதியில் இருந்து வந்தவர்கள் நாங்கள் ஏற்கனவே வந்து காத்திருப்பதால் முதலில் நாங்கள் தான் இறங்குவோம் என்று கூறினார்கள். இதனால் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. அப்போது இருதரப்பினரும் அரிவாளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி வெட்டிக்கொண்டனர்.
இதனால் சம்பவ இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. பக்தர்கள் அலறி அடித்து ஓடினார்கள். உடனடியாக போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இந்த மோதலில் கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், முருகன் ஆகிய 2 பேருக்கும், சூரங்குடியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் துரை, மணி உள்பட 4 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
உயிருக்கு போராடிய அவர்களை வள்ளியூர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பாளை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications