இந்தியாவை சமாளிக்கத் தான் ஹக்கானி அமைப்பிற்கு பாக். ஆதரவு: முஷாரப் பேட்டி
லண்டன்: ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பப் பார்க்கிறது இந்தியா. எனவே, அதை சமாளிக்கத் தான் பாகிஸ்தான், ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்து வருகிறது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
ஹக்கானி தீவிரவாத அமைப்பு தொடர்பாக பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும், ஹக்கானி தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு உள்ளது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகினார். அமெரிக்கா எங்களைக் குற்றம் கூறுகிறது. ஆனால் அமெரி்ககாவின் சிஐஏவுக்கும் உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது. ஏன், ஹக்கானி அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டாலும் அதை துவக்கி, ஊக்குவித்து வருவது சிஐஏ தான். சிஐஏவின் செல்லப்பிள்ளை ஹக்கானி அமைப்பு என்று அமெரிக்கா மீது பதிலுக்கு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கும், ஹக்கானி அமைப்புக்கும் தொடர்பு உண்டு என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் பதவியில் இருந்தால் பாகிஸ்தானை எவ்வாறு காப்பாற்றுவது என்று தான் யோசித்திருப்பேன். இந்தியா, ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்ப முயலும் போது, நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாக்கத் தான் நினைப்போம்.
வடக்கு வசிரிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹக்கானி அமைப்புக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications