இந்தோனேசியாவின் மலைக்கிராமத்தில் விமான விபத்து: 18 பேர் பலி?
மெடான்(இந்தோனேசியா): மேற்கு இந்தோனேசியாவில் 18 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று மலைக்கிராமத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் பயணித்த அனைவருமே இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது என்று அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிஏஎஸ்ஏ சி- 212 என்னும் சிறிய ரக விமானம் இன்று காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் இருந்து அசே மாகாணத்திற்கு புறப்பட்டது. அதில் 3 பணியாளர்கள் 15 பயணிகள் உள்பட 18 பேர் பயணித்தனர். மலைக் கிராமமான பஹோரக்கில் சென்று கொண்டிருக்கையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 18 பேருமே உயிர் இழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மலைப் பகுதி என்பதாலும், கனமழை பெய்வதாலும் மீட்புப் பணி தடைபட்டுள்ளது.
அண்மைக் காலமாக இந்தோனேசியாவில் விமான விபத்து, ரயில் விபத்து, படகு விபத்து என்று ஒரே விபத்து மயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications