சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு
சென்னை : சென்னையில் இன்று காலையில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர். சாலைகளில் வெள்ளம் போல ஓடிய மழை நீரால் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த திடீர் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெயிலும் புழுக்கமும் மக்களை வதைத்து வந்தது. மழை வராதா என்று மக்கள் ஏங்கும் அளவுக்கு கடும் வெயில் கொளுத்தி வந்தது. இரவிலோ புழுக்கத்தால் மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென வானம் கடுமையாக இருட்டி வந்தது. 7 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் இது கன மழையாகவும், சில இடங்களில் மிக பலத்த மழையாகவும் இருந்தது. பலத்த காற்றும் , இடியும் கூடவே இருந்ததால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் நகரின் பல பகுதிகளும் வெள்ளக்காடாகின. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மழை காரணமாக சென்னையில் பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications