அன்னா ஹஸாரேவை குடியரசுத் தலைவராக்கும் காங்.?- கிசுகிசுக்கும் ராலேகான் சித்தி!

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
ராலேகான் சித்தி: அன்னா ஹஸாரேவை அடுத்த குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் முன்வந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராலேகான் சி்த்தி கிராமத்தில் பரவலாக பேசப்படுகிறது.

மராத்தி மொழி நாளிதழ் ஒன்று அன்னா ஹஸாரேவை அடுத்த குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் நினைப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹஸாரேவுக்கு அமோக ஆதரவு கிடைத்தது. இதைப்பார்த்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அன்னாவை அடுத்த குடியரசுத் தலைவராக்கினால் என்ன என்று டெல்லியில் கூட்டம் நடத்தியதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அன்னாவை குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் முன்வந்துள்ளதாக பேசிய ராலேகான் சித்தி கிராம மக்கள் இந்த செய்தியைப் படித்ததும் அதை ஊர்ஜிதப்படுத்திவிட்டனர். அவர்கள் நினைப்பை உண்மையாக்குவது போன்று அன்னாவை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் ராலேகான் சித்திக்கு படையெடு்தது வருகின்றனர்.

வருவாய்த்துறை அமைச்சர் பாலாசாஹெப் தோரட், அகமதுநகர் எம்.பி. பாவ்சாஹெப் மற்றும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் விஜய்சிங் மோஹிதே ஆகியோர் அன்னாவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதேசமயம், அன்னா குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+