தஞ்சையில் பெய்த பேய் மழை- மின்னல் தாக்கி பெரிய கோவில் கோபுரம் சேதம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெய்த கன மழை மற்றும் இடி தாக்கியதில் பெரிய கோவில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரம் சேதமடைந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. காலையில் உள்ளிட்ட ஒட்டியுள்ள பகுதிகளை உலுக்கிய மழை, இரவில் தஞ்சையை உலுக்கியது.
நேற்று இரவு தஞ்சையில் பலத்த மழையும், இடியும் மின்னலுமாக இருந்தது. இதில் இடி தாக்கியதில், தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டபம் மற்றும் கருவறை விமானத்து்க்கு நடுவே உள்ள மணிமண்டப கோபுர சுவரின் காரை பெயர்ந்து விழுந்தது.
இன்றும் மழை பெய்யலாம்
இதற்கிடையே, கடலோர தமிழகத்தில் இன்றும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலையில் கன மழையும் பலத்த காற்றும், இடியும் வெளுத்துக் கட்டி மக்களைப் பயமுறுத்தி விட்டது.
பலத்த மழை காரணமாக சென்னை நகரில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி போக்குவரத்தை சீர்குலைத்து விட்டது. பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்களை பேரவஸ்தைக்கு உள்ளாக்கி விட்டது. இந்தத் திடீர் மழையால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த மழை குறித்து வானிலை ஆய்வகம் தரப்பில் கூறுகையில், சென்னையில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. இந்த மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர வாய்ப்புள்ளது. சென்னை மட்டுமல்லாமல் கடலோர தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலமாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாமல், விருதுநகர், மதுரை,திருச்சி, கரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
இன்று காலை முதல் சென்னை நகரில் வெயில் மூடி மூ்டி அடிக்கிறது. மாலையில் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications