இங்கிலாந்தில் புகலிடம் கோரிய 27 தமிழர்கள் உள்பட 50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
கொழும்பு: இங்கிலாந்தில் புகலிடமாக புகுந்த 27 ஈழத் தமிழர்கள் உட்பட 50 இலங்கை நாட்டவருக்கு அந்த நாடு புகலிடம் வழங்க இயலாது என்று கூறி விட்டது. இதையடுத்து அனைவரும் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசிற்கு இடையேயான உள்நாட்டு போர் முடிவடைந்தாலும், அங்கு அமைதி நிலை திரும்பவில்லை. ஈழத்தில் தமிழர்கள் தொடர்ந்து நிம்மதியற்ற நிலையில்தான் வசித்து வருகின்றனர்.
இதனால் பல்வேறு நாடுகளுக்கும் அவர்கள் அகதிகளாக சென்று புகலிடம் கோரி இடம் பெயர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் இலங்கையை சேர்ந்த 27 தமிழர்கள் இங்கிலாந்து புகலிடம் கோரி அந்த நாட்டு வெளியுறவுத்துறையிடம் விண்ணப்பித்தனர். ஆனால் தற்போது இலங்கையில் பிரச்சினை இல்லை என்று கூறி இவர்களின் விண்ணப்பத்தை இங்கிலாந்து நிராகரித்து விட்டது. இதனால் அனைவரும் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பபட்டனர். நேற்று காலை அனைவரும் கொழும்பு விமான நிலையம் வந்து சேர்ந்தனர். இவர்களின் நிலையும், பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
மொத்தம் 50 இலங்கையர்கள் புகலிடம் கோரியிருந்தனர். 27 தமிழர்கள் போக மற்றவர்களில் 11 பேர் சிங்களர்கள் என்பதும், 12 பேர் முஸ்லீம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications