ரிமோட் கன்ரோல் விமானம் மூலம் பென்டகன் மீது தாக்குதல் நடத்த முயன்ற யுஎஸ் இளைஞர் கைது
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமை அலுவலமான பென்டகன் மீது ரிமோட் கன்ரோலில் இயங்கும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட வாலிபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் நகரில், அந்நாட்டு ராணுவ தலைமை அலுவலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலம் மீது அல்-கொய்தா தீவரவாதிகள் விமானத்தை மோதி தகர்த்தனர். இந்த தாக்கல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தாண்டு மிக பெரிய அளவில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதற்கான ரகசிய விசாரணையில் உளவுத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். பாஸ்டன் பகுதியில் ரிமோட் கன்ரோல் விமானங்களை தயாரிக்க தேவையான, கட்டமைப்புகளை கொண்ட பகுதியை வாடகைக்கு தேடி வந்த வாலிபர் ஒருவர் உளவுத் துறை போலீசாரிடம் சிக்கனார்.
நார்த் ஈஸ்டன் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்ற ரிஸ்வான் பெர்டாஸ் என்ற வாலிபரை பிடித்து விசாரித்த போது, பென்டகன் மீது ரிமோட் கன்ட்ரோல் விமானங்களை மோதவிட்டு இழப்பை ஏற்படுத்த சதி திட்டமிட்டிருப்பது தெரிந்தது.
அவரது தங்குமிடத்தை சோதனையிட்ட போது, ரிமோட் கன்ட்ரோல் விமானம் உருவாக்கத்திற்கான மாதிரிகள் சிக்கியது. விசாரணையில் ரிஸ்வான் பெர்டாஸ்சிற்கு, அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது தெரிந்தது.
இவர் தயாரித்து கொடுத்த மொபைல்போன் குண்டுகள் மூலம் 8 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் கிடைத்தது. இதேபோல 8 மொபைல்போன் குண்டுகளை அல்-கொய்தாவிற்கு செய்து கொடுத்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக வாஷிங்டன் பகுதியில் சென்று தனது ரிமோட் கன்ரோல் விமானங்களை உருவாக்க இடம் தேடியுள்ளார். ஆனால் அங்கு அதற்கான அனுமதி கிடைக்காத நிலையில் பாஸ்டனை தேர்வு செய்துள்ளார். பாஸ்டன் பகுதியில் அமெரிக்கராக வாழ்ந்த வந்த ரிஸ்வான் அமெரிக்காவை தகர்க்க திட்டமிட்டதாக வெளியான செய்தியை, கேள்விப்பட்ட அவரது சுற்றத்தாரால் இதை நம்பவே முடியவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications