15ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு: கனிமொழி ஜாமீன் மனு மீது 17ம் தேதி விசாரணை

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கலைஞர் டி.விக்கு ரூ.200 கோடி கைமாறிய குற்றச்சாட்டின் பேரில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆ.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு லஞ்சமாக இந்தத் தொகையை வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இது கடனாக வாங்கப்பட்ட பணம் என்றும், இதை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறி வருகிறது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனிமொழியும், சரத்குமாரும் தாக்கல் செய்த மனுக்களை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை நிராகரித்து விட்டன.
ஜாமீனை நிராகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கையில், சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்பு அதே நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறியிருந்தது.
ஆனால் குற்றச்சாட்டு பதிவு செய்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 5 மாதங்களாக கனிமொழியும் சரத்குமாரும் திகார் சிறையிலேயே உள்ளனர்.
இந் நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்தனர். இதற்கு சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பிறகே ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால், அதற்கு முன் இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ கூறியது.
இந் நிலையில் இந்த ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறும் என சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ வழக்கறிஞரும் கனிமொழி, சரத்குமாரின் வழக்கறிஞர்களும் இதை வேறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கோரினர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், 17ம் தேதி தேதி கனிமொழி, மற்றும் சரத்குமாரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்பு கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதால் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications