கரூர் நகர சபை தலைவர் பதவி- தேமுதிக வேட்பாளர் மனு தள்ளுபடி
கரூர்: கரூர் நகர சபை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்
என்.எஸ்.கே.வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வரும் 17ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான
வேட்புமனு கடந்த 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை
நடந்தது.
நகராட்சி தலைவர் பதவிக்கு 21 பேரும், 48 வார்டுகளின் கவுன்சிலர்கள் பதவிக்கு 358
பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். கரூர் நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர்
மைவிழிசெல்வி மனுக்களை பரிசீலனை செய்தார்.
அப்போது தே.மு.தி.க. சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த
என்.எஸ். கிருஷ்ணனின், வேட்பு மனுவில் வார்டு எண், வாக்காளர் எண் மற்றும் வார்டு எண்கள்
குறித்த விபரங்கள் முறையாக இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது.
தி.மு.க. வேட்பாளர் ரவி, அ.தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ், காங்கிரஸ் வேட்பாளர்
சுப்ரமணியன், ம.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி உள்பட 20 பேரின் மனுக்கள் ஏற்றுக்
கொள்ளப்பட்டது. அதேபோல 48 வார்டுகளின் கவுன்சிலர்கள் பதவிக்கான, 358 மனுக்களில் 7
பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மீதமுள்ள 351 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தே.மு.தி.க. சார்பாக மாவட்டம் வேட்பு மனு தாக்கல் செய்த பலரது மனு ஏற்கப்பட்ட
நிலையில், மாவட்ட செயலாளராக உள்ள ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவம்
தே.மு.தி.க. கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications