திருச்சி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் விஜயா ஜெயராஜ் - கருணாநிதி அறிவிப்பு

திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டதால் திருச்சி மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைப்பதை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து திருச்சி மாநகராட்சிக்கு வருகிற 17-ந்தேதி தேர்தல் நடை பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வருகிற 7-ந்தேதி கடைசி நாளாகும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க.- தி.மு.க., ம.தி.மு.க. அறிவித்தன. திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஜெயா போட்டியிடுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ம.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் ரொக்கையா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் இன்று தி.மு.க. சார்பில் மேயர் பொறுப்புக்கு விஜயா ஜெயராஜ் போட்டியிடுவார் என்று தி.மு.க.. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளும் மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. அங்கு யார்-யார் களத்தில் நிற்பார்கள் என்பது 10-ந் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது தெரிந்து விடும்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications