அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. கே.சி. பழனிசாமி மீது மீண்டும் ஒரு வழக்கு !

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரை அடுத்த நெரூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி. பழனிசாமி மற்றும் அவரது உதவியாளர் சுந்தரேசன், கிரிராஜன் உள்ளிடவர்கள் மீது வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரை அடுத்த நெரூர் பகுதியில் ராமசாமி அய்யர், முத்தையா ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம், 15 ம் தேதி, அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி. பழனிசாமி, அவரது உதவியாளர் சுந்தரேசன், மற்றும் கிரிராஜன் உள்பட சிலர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் கடந்த 30 ம் தேதி கிராம நிர்வாக அதிகாரி தங்கராஜ் புகார் அலித்தார்.

இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி. பழனிசாமி மீது வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே, கரூர் அருகே உள்ள மாயனூர் காவிரியாற்று பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளியதாக, வி.ஏ.ஓ. (பொறுப்பு) நீலமேகம் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் கடந்த ,19 ம் தேதி மதியம், 2.45 மணிக்கு பழனிசாமி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+