நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு பாஜகவினர் தயாராக வேண்டும்-அத்வானி

டெல்லியில் நடந்து வந்த 2 நாள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் முடிவடைந்துள்ளது. இக்கூட்டத்தில் அத்வானி பேசுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஅரசு தொடர்ந்து பல இமாலயத் தவறுகளை இழைத்து வருகிறது. இதை மக்கள் மத்தியில் பாஜகவினர் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த ஆட்சிக்கும், காங்கிரஸுக்கும் பெரும் சிக்கல்கள், நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த அரசு தற்கொலைப் பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. நாம் அதை எதுவும் செய்ய வேண்டியதில்லை. மாறாகஅதுவே வீழ்ந்து விடும். இந்த அரசு பதவியில் நீடிக்க எந்தவிதமான அருகதையும் இல்லை.
இந்த நிலைமை காரணமாக விரைவில் லோக்சபாவுக்கு இடைத்தேர்தலை எதிர்பார்க்கலாம். அதற்கு பாஜகவினரும்,மக்களும் தயாராக இருக்க வேண்டும் என்றார் அத்வானி.
சுஷ்மா சுவராஜ் பேசுகையில், காங்கிரஸின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்பிக்க வேண்டும். நம்மிடம் சுத்தமான இமேஜ் இருக்க வேண்டும். நாம் தூய்மையானவர்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும். கட்சிக்குள் ஒற்றுமை வலுக்க வேண்டும். கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications