11 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு முடிந்த சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம்!

இன்று தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளாகும். இதையடுத்து டெல்லி வந்த சந்திரசேகர ராவ், தனது ஆதரவாளர்களுடன் டெல்லி ராஜ்காட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை தொடங்கினார். காலை 11 மணிக்கு அவர் தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் ராஜ்காட் வளாகத்தில் உள்ள புல்வெளிப் பகுதியில் அமர்ந்தார் ராவ்.
பிற்பகல் 2 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அவரது ஆதரவாளர்கள் அறிவித்தனர். ஆனால் உண்ணாவிரதம் இருப்பதற்கான அனுமதி எதையும் ராவ் பெறவில்லை. இதனால் அவர் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகின.
இந்த நிலையில் 1 மணிக்கே தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார் ராவ்.
தெலுங்கானா தனி மாநிலம் கோரி ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஆனால் காங்கிரஸோ, மத்திய அரசோ இதைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றன.
இதைக் கண்டிக்கும் வகையில் இன்று அடையாள உண்ணாவிரதம் இருந்தார் ராவ் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினர். ஆனால் 11 மணிக்குத் தொடங்கி 1 மணிக்கு முடிவடைந்த இதை உண்ணாவிரதப் போராட்டம் என்று எப்படிக் கூற முடியும் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications