துபாய் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதிய அத்தியாயத்தை எழுதும்- மொய்லி

Subscribe to Oneindia Tamil

2nd World Tamils economic conference will create new chapter in the world: Moily
துபாய்: துபாயில் தொடங்கியுள்ள உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று புகழாரம் சூட்டியுள்ளார் மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

துபாயில் இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதியான நேற்று தொடங்கியது. 4 ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது. மாநாட்டை மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மொய்லி பேசுகையில், இந்தியாவே உலகின் எதிர்காலம். இம்மாநாடு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும்.

இந்தியாவில் எல்லாவித உலகத்தர வசதிகளும் உள்ளன. அமீரகம் மிகச் சிறப்பான நாடு. அமீரக ஆட்சியாளர்களின் தூர நோக்குப் பார்வை போற்றத்தக்கது.

விரைவில் புதிய பொருளாதாரக் கொள்கை மத்திய அமைச்சரவையின் அனுமதிக்குப் பிறகு வெளியிடப்பட இருக்கிறது. இது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி உலக வன்முறை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

முடியாதது என்று எதுவும் இல்லை. எதையும் சாதித்துக் காட்டவேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+