சீனாவை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வேகமாக வளர்கிறது இந்தியா- துபாய் மாநாட்டில் மொய்லி

துபாயில் நடந்த இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கவுன்சில் ( Indian Business and Professional Council) மாநாட்டில் நேற்று பங்கேற்ற அவர் பேசியது:
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இப்போது 8.5 சதவீதமாக உள்ளது. விரைவில் இது 10 சதவீதமாக உயரும் வாய்ப்பு உள்ளது. அடுத்த மூன்றே ஆண்டுகளில் இந்த வேக வளர்ச்சி சாத்தியமாகிவிடும். சீனாவை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் இந்த வளர்ச்சி அமையும்.
இந்தியாவின் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வரும் 2030-ல் உலகின் சூப்பர் பவர் இந்தியாதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அத்தனை வல்லரசுகளும் ஒப்புக் கொண்ட உண்மை இது.
விரைவில் புதிய பொருளாதாரக் கொள்கை மத்திய அமைச்சரவையின் அனுமதிக்குப் பிறகு வெளியிடப்பட இருக்கிறது. இது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுதந்திரமான முதலீடு, பங்குதாரர்களுக்கு இணக்கமான முதலீட்டுச் சூழல், அதே நேரம் அரசின் பாதுகாப்பான கண்காணிப்பு என பலவித சிறப்பம்சங்களைக் கொண்டதாக இந்த புதிய பொருளாதாரக் கொள்கை அமையும்.
அரசுத் துறை நிறுவனங்களில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கப் போகும் இந்த புதிய பொருளாதாரக் கொள்கையை அடுத்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட உள்ளது. டிசம்பரில் இதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துவிடும் என நம்புகிறேன். இந்த புதிய கொள்கை அனைத்து அமைச்சகங்களுக்குமே ஒரு வழிகாட்டியாக அமையும்.
இந்தியாவில் பல்வேறு அமைச்சகங்களும் ரூ 11 ஆயிரம் பில்லியன் அளவுக்கு கொள்முதல் செய்கின்றன. இதில் நிறைய பேர சர்ச்சைகள், அதிகார பகிர்வின்மை சர்ச்சைகள் உள்ளன. இவற்றைக் களைய நாம் நீண்டதூரம் போக வேண்டியுள்ளது. இதற்காகவே, இந்தியாவில் ஒரு தேசிய சந்தை அமைக்கும் முயற்சி நடந்துவருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட் மிகச் சிறப்பான நாடு. அமீரக ஆட்சியாளர்களின் தூர நோக்குப் பார்வை போற்றத்தக்கது. இங்குவாழும் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வெளியிலிருந்து இந்தியாவுக்காக பாடுபடுகின்றனர். அந்தவகையில் அவர்கள்தான் இந்தியாவின் நிஜமான தூதர்கள், " என்றார்.
கன்னடர்கள் சங்கம் வரவேற்பு
முன்னதாக அவருக்கும் அவர் மனைவி மாலதி மொய்லிக்கும் துபாயில் வாழும் கன்னடர்களின் தேவடிகா சங்கத்தின் (Devadiga Sangha) சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கர்நாடகத்தைச் சேர்ந்த துபாய் வாழ் தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications