எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பு: தம்பிதுரை
கரூர்: அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமிக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ள தொடர்பு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என, கரூர் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் கொங்கு திருமண மண்டப்பத்தில் அ.தி.மு.க., சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கரூர் எம்.பி. தம்பிதுரை கலந்து கொண்டு பேசியதாவது, கரூர் எம்.பி.தொகுதியில், 1989 பிறகு தான், அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
அதன்பிறகு, அ.தி.மு.க.வின் கோட்டையாக கரூர் உள்ளது. இடையில் ஒருமுறை மட்டும் மணல் கொள்ளை அடித்த கே.சி.பழனிசாமி தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார். தற்போது சிறையில் உள்ள கே.சி.பழனிசாமிக்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ள தொடர்பு பற்றிய தகவல் விரைவில் வெளிவரும்.
அப்போது, திஹார் சிறையில் உள்ள முன்னாள் மத்தியமைச்சர் ராஜாவுக்கும், கே.சி.பழனிசாமிக்கும் இருந்த தொடர்பு குறித்து தெரியவரும். ராஜா, கனிமொழி அடுத்து மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி ஆகியோரும் சிறைக்கு செல்லப் போகின்றனர். கருணாநிதியுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், அனைவரும் ஒரு நாளாவது சிறைக்குச் செல்ல வேண்டிய தருணம் வரும், என்றார்.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. காமராஜ் , கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் அதிமுக வேட்பாளர் தமிழ்நாடு செல்வம், கரூர் மாவட்ட அதிமு பொருளாளர் பி.கே.எஸ்.முரளி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications