இன்னும் 10 நாளில் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு

இதுகுறித்து சிபிஐ தரப்பி்ல் கூறுகையில், 2ஜி விவகாரத்தில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை முடிவடைந்து விட்டது. இன்னும் 10 நாட்களில் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்படும். இதுதொடர்பாக சிபிஐ உயர் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்று அத்தகவல்கள் கூறுகின்றன.
செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வக்கீல் கூறுகையில்,தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இருப்பதாகவும், அவர் மீது விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் கூறியது.
ஏர் செல் விவகாரத்தில்தான் தயாநிதி மாறன் வலுவாக சிக்கியிருக்கிறார். ஏர் செல் நிறுவனத்தை சிவசங்கரன் வைத்திருந்தபோது 2ஜி உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தது ஏர்செல். ஆனால் அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வந்தார் தயாநிதி மாறன். மேலும், ஏர் செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திடம் விற்குமாறு சிவசங்கரனை மாறன் நிர்ப்பந்தப்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு. அதன்படி ஏர்செல் விற்கப்பட்டவுடன், மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு உடனடியாக உரிமங்களை அள்ளி வழங்கினார் மாறன் என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
இதற்குப் பிரதியுபகாரமாக மேக்ஸிஸ் நிறுவனம் சன் டைரக்ட் சேவையில் பெரும் பண முதலீடு செய்ததாதக இன்னொரு குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
10 நாட்களில் தயாநிதி மாறன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவுள்ளதால் அவர் விரைவில் கைதாகும் சூழல் அதிகரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications