தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வைகோ மீது போலீசார் வழக்கு
மதுரை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ம.தி.மு.க.பொதுச் செயலர் வைகோ மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
தமிழகம் முழுக்க உள்ளாட்சித் தேர்தல் திருவிழா களைகட்டி வருகின்றது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சிக்கு ம.தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிடும் பாஸ்கர சேதுபதி-யை ஆதரித்து நேற்று மதுரையின் பல்வேறு பகுதிகளில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகளவில் வாகனங்கள் அவர் பின்பு அணிவகுத்து வந்ததாக மதுரை காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிந்தனர்.
ஏற்கனவே, மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications