இந்திய-பாக். எல்லையில் ரூ. 135 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: பாகிஸ்தானியர்கள் தப்பியோட்டம்

இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் பவன் சவுத்ரி பிடிஐ-க்கு கூறியதாவது,
நேற்று முன்தினம் இரவு எல்லைப் பாதுகாப்பு படையின் ரோந்துப் படை இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி அருகே ரோந்தில் இருந்தது. அப்போது ரூ. 135 கோடி மதிப்பிலான 27 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் கடத்த முயன்றனர். அதை ரோந்துப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த ஆண்டு இவ்வளவு அதிக மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது இது தான் முதல் தடவை.
போதைப் பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர்களை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படையினர் சுடத் தொடங்கியவுடன் அவர்கள் போதைப் பொருளை போட்டுவிட்டு பாகிஸ்தானுக்குள் ஓடிவிட்டனர் என்றார்.
கடந்த 4ம் தேதி ரூ. 75 கோடி மதிப்பிலான 15 கிலோ ஹெராயின் போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications