நிலமோசடி வழக்குகள்: போலீஸ் வலையில் துரைமுருகன் குடும்பத்தினர்!

Subscribe to Oneindia Tamil

Duraimurugan
வேலூர்: தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் மீது நிலமோசடி குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் காட்பாடி காந்தி நகர் கூட்டுறவு நகர அமைப்பு சங்கத்திற்கு சொந்தமான 66,000 சதுர அடி காலிமனை காட்பாடி காந்தி நகர் பி.டி.கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ளது. இந்த இடத்தை விற்பனை செய்ய சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி நடந்த ஏலத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவரது மகன் கதீர்ஆனந்த 5,400 சதுரடி நிலத்தை 27 லட்சத்து 27,000 ரூபாய்க்கும் துரைமுருகன் மனைவி சாந்தகுமாரி 480 சதுரடி நிலத்தை 23 லட்சத்து 85,600 ருபாய்க்கும் கதீர்ஆனந்தன் மனைவி சங்கீதா 5400 சதுரடி நிலத்தை 27லட்சத்து 27,000ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர்.

இதே போல நவம்பர் 31 ம் தேதி ஈஸ்ட் மெயின் ரோடில் உள்ள 6000 சதுர அடி நிலத்தை துரைமுருகன் தம்பி துரைசிங்காரம் 28 லட்சத்து 26,000 ரூபாய்க்கும் இவரது மனைவி முல்லைகொடி 2008 ஜனவரி 31 ம் தேதி நடந்த ஏலத்தில் 16,500 சதுர அடி நிலத்தை 85 லட்சத்து 80,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.

அமைச்சர் துரைமுருகன் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஏலம் எடுத்துள்ளார் என்றும், ஏலத்தில் அவரது குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் யாரும் கலந்து கொள்ளாத படி பார்த்துக் கொண்டார் என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து, வேலூர் மாவட்ட நிலமோசடி பிரிவு டி.எஸ்.பி. முகமது கோரி விசாரனை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் துரைமுருகன் குடும்பத்தினர் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+