முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் உறவினர் வீடுகளில் லஞ்ச ஓழிப்பு துறை சோதனை!

திமுக ஆட்சியின் போது சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். இவர் குமரி மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.
பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுரேஷ் ராஜன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஓழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக லஞ்ச ஓழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் சுரேஷ்ராஜன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது உறுதியானது. இதை தொடர்ந்து சுரேஷ்ராஜன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
திண்டுக்கல், விருதுநகர், திருச்சி ஆகிய 3 மாவட்ட லஞ்ச ஓழிப்பு துறை போலீஸ் அதிகாரிகளை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் சுரேஷ் ராஜன் வீடு, அலுவலகம், மற்றும் உறவினர்களின் வீடுகளை கண்காணித்தனர்.
இன்று காலை அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வெள்ளாளர் தெருவில் உள்ள சுரேஷ் ராஜன் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றபோது வீட்டில் சுரேஷ்ராஜன், அவரது மனைவி பாரதி, மகன் மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்களிடம் சோதனைக்கு வந்த விபரத்தை அதிகாரிகள் தெரிவித்து வீட்டுக்குள் சென்று ஆவணங்களை வாங்கி பார்த்து விசாரணையில் ஈடுபட்டனர்.
சுரேஷ் ராஜன் வீட்டில் சோதனை தொடங்கிய அதே நேரத்தில் வெள்ளாளர் தெருவில் உள்ள அவரது சகோதரி உமா வீடு, வெள்ளாளர் கிழக்கு தெருவில் உள்ள இரும்பு ஆலை அலுவலகம், தம்மத்து கோணம் எறும்பு காட்டில் உள்ள வலை கம்பெனி, வெள்ளாளர் மேற்கு தெருவில் உள்ள சுரேஷ் ராஜனின் மாமனார் வீடு, பர்வத்தினி தெருவில் உள்ள கொழுந்தியாள் வீடு, பழவூரில் உள்ள இரும்பு ஆலை ஆகிய 7 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை தனிதனிக்குழுக்களாக சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. அவற்றை கைப்பற்றிய போலீசார் சுரேஷ் ராஜன் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திமுக முன்னாள் அமைச்சர்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், நிலம் அபகரித்ததாகவும் இதுவரை 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ராஜன் 9வது முன்னாள் அமைச்சராவார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications