சென்னையிலிருந்து திருமங்கலத்துக்கு வந்து சேர்ந்த இலவச மிக்சிகள்- பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

Free Mixie
மதுரை: சென்னையிலிருந்து லாரி மூலம் மதுரை திருமங்கலத்துக்குக் கொண்டு வரப்பட்ட அரசின் இலவச மிக்சிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அவை மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டன.

மதுரை திருமங்கலம் தேர்தல் பரபரப்புக்குப் பெயர் போனது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் விளையாடிய பணம், பொருள் விளையாட்டு மக்களால் மறக்க முடியாதது. திருமங்கலம் பார்முலா என்ற பெயரே இந்த இடைத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகி புகழ் பெற்றது. அப்படிப்பட்ட திருமங்கலத்தால் இன்று இன்னொரு பரபரப்பு ஏற்பட்டது.

இன்று பிற்பகலில் திருமங்கலத்திற்கு ஒருலாரி நிறைய இலவச மிக்சிகள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்த லாரி அங்குள்ள நகராட்சி திருமண மண்டபத்திற்கு வந்தன. அவற்றை ஊழியர்கள் கல்யாண மண்டபத்திற்குள் இறக்கி வைத்தனர்.

தகவல் அறிந்ததும் திமுகவினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் விரைந்து வந்து போராட்டத்தில் குதித்தனர். தேர்தல் விதிகளை மீறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இலவச மிக்சிகளை வழங்கக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தாசில்தார் மோகன், வருவாய் ஆய்வாளர் பிரதாப் சிங் ஆகியோர் போராட்டம் நடத்திய கட்சிக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் மிக்சிகளை திருப்பி அனுப்ப முடிவானது.

இதைத் தொடர்ந்து இறக்கிய மிக்சிகளை மீண்டும் லாரியில் ஏற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+