மனைவியின் கள்ளக்காதல்- நேரில் பார்த்த கணவன் தற்கொலை-மகளும் மாண்ட பரிதாபம்!
மாண்டியா: தனது மனைவி வேறு ஒரு நபருடன் தனது வீட்டில் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தம்பதியின் மகள் ஏற்கனவே தனது தாயின் மோசமான நடத்தையால் மனம் உடைந்து தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல் பெருகி வருகிறது. இந்த கள்ளக்காதல் உறவுகள் பல உயிர்கள் அநியாயமாக பலியாகி வருகின்றன. தற்கொலை, கொலை, அடிதடி என உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒரு பெண்ணின் கள்ளக்காதலால் அவரது மகளும், கணவரும் பரிதாபமாக தங்களது உயிரை மாய்த்த சம்பவம் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், நாகமங்களா அருகே நடந்துள்ளது.
அங்குள்ள தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி பெயர் நாகம்மா. இவர்களுக்கு அஸ்வினி என்ற மகள் இருந்தார். நாகம்மாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே கள்ள உறவு இருந்தது. இது தெரிய வந்து அதிர்ந்த ஜெகதீஷ் ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிட்டார். பஞ்சாயத்தாரும் விசாரித்து அபராதம் விதித்தனர்.
ஆனாலும் அபராதத்தைக் கட்டி விட்டு தங்களது கள்ள உறவை தொடர்ந்து வந்தனர் குமாரும், நாகம்மாவும். இதனால் மனம் உடைந்து போன அஸ்வினி 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியின் நடத்தையாலும், மகளின் மரணத்தாலும் நிலை குலைந்து போன ஜெகதீஷ், மனைவியைக் கண்டித்தார். ஆனாலும் அவர் திருந்தியபாடில்லை.
இந்த நிலையில் ஜெகதீஷ் வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டில் மனைவியும், குமாரும் உல்லாசமாக இருந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போய் விட்டார். இவ்வளவு சொல்லியும் திருந்தவில்லையே மனைவி என்று நொந்து போன அவர் வீட்டுக்குள் நுழையாமல் வெளியேறினார். அருகே உள்ள மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து விட்டார்.
போலீஸார் குமார் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட அவரைத் தேடி வருகின்றனர். ஒரு பெண்ணின் கள்ளக்காதலால் இரண்டு தற்கொலைகள் நடந்திருப்பது அந்தக் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications