கார் விபத்தில் சிக்கியதில் தம்பதியர் உட்பட 3 பேர் பலி
சென்னை: உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, சென்னை திரும்பிய கணவன்-மனைவி உட்பட 4 பேர் பயணித்த கார், விபத்தில் சிக்கியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் அருண்குமார்(27). இவரது மனைவி நிரஞ்சனா(26). ஐ.டி.இன்ஜினியர். இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
சென்னையில் தங்கி, வேலை பார்த்த 2 பேரும், ஆயுத பூஜை விடுமுறைக்காக, அருண்குமாரின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம், கத்தரிக் குப்பத்திற்கு சென்றனர். அங்கு உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், நேற்று காரில் சென்னை திரும்பினர். அருண்குமார், நிரஞ்சனா மற்றும் உறவினர்களான சிலம்பரசன் மற்றும் வினோத்குமார் ஆகிய 4 பேரும் காரில் பயணித்தனர்.
காரை வினோத் குமார் ஓட்ட, அகரம் அரசு பள்ளி அருகே வந்தபோது வளைவு ஒன்றில் காரின் கட்டுப்பாடு இழந்தது. இதில் சாலையோர மரங்களில் வரிசையாக சென்று கார் மோதியது. அப்போது காரின் முன்பக்கத்தில் இருந்த சிலம்பரசன் காரில் இருந்து வெளியே தூக்கி ஏறியப்பட்டார்.
தொடர்ந்து பல மரங்களில் மோதிய காரின் வேகம் குறைந்து அப்பகுதியில் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சிலம்பரசன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேப்பங்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications