அதிமுகவுடன் கூட்டணி வைத்து பழி்ககு ஆளானோம்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
சிவகங்கை: அதிமுகவுடன் கூட்டணி வைத்து பழிக்கு ஆளானதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நகரசபை தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் கார்கண்ணன் போட்டியிடுகிறார். சிவகங்கையில் உள்ள சண்முகராஜா கலையரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட வைகோ கார்கண்ணனுக்கு ஆதரவாகப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவுடன் கூட்டணி வைத்து பழி்ககு ஆளானோம். ஆனால் காலம் அந்தப் பழியைத் துடைத்துவிட்டது. சுயமரியாதை, தன்மானம் தான் முக்கியம் என்று தெரிவித்து கூட்டணியை விட்டு வெளியேறினோம். அதனால் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
தமிழகத்திற்கு ஏற்பட்ட ஆபத்தைப் போக்க நாங்கள் போராடுகிறோம். முல்லைப்பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு முடிவெடுத்துவி்ட்டது. அதற்காக அணையில் 2 பகுதியையும் பார்த்து வைத்துள்ளது. புதிய அணை கட்ட ரூ. 666 கோடி நிதியும் ஒதுக்கிவிட்டது. புதிய அணை மட்டும் கட்டப்பட்டால் தென் தமிழகமே வரண்டு போய்விடும்.
தமிழர்களின் வாழ்வாதாரத்தை காக்க மதிமுக போராடி வருகிறது. 3 பேரை மரண தண்டனையில் இருந்து மீட்கப் போராடுகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை எதிர்த்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை எதிர்த்தும் போராடுகிறது.
உலகில் எங்கு துன்பம் என்று தெரிந்தாலும், அதை எதிர்த்து போராடுகிறோம் என்றார்.
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வைகோ தம்பி 3வது முறையாக போட்டி
கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தம்பி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் கடந்த 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் தனது சொந்த கிராமமான குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications