வீட்டு வாசலில் மது பாட்டில்- வாக்காளர்களைக் கவர கர்நாடக 'சரக்கு' தரும் வேட்பாளர்கள்!
திருவள்ளூர்: ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது பகுதி வாக்காளர்களைக் கவருவதற்காக கர்நாடகத்திலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து வீடு வீடாக வாசலில் டோர் டெலிவரி செய்து வருகிறார்களாம். இதனால் ஊரே மது மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சித் தலைவர் தேர்தலில் தான் இந்தக் கூத்து.
புதுகும்மிடிப் பூண்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள், வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், 'ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்படும், அதிக மதிப்பெண் பெறும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி பேரூராட்சி ஆக்கப்படும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப் படும்' என தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.
இது போதாதென்று கர்நாடகத்திலிருந்து மது பாட்டில்களை கடத்தி வருகிறார்களாம். லாரி,வேன்கள் மூலம் இந்த மதுவை கொண்டு வந்து வீடு வீடாக சப்ளை செய்கிறார்கள். வீட்டு வாசலில் இரவில் வைத்து விட்டுப் போய் விடுகிறார்களாம்.
கர்நாடக சரக்கு போதாதென்று லோக்கலிலும், டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு சரக்குகளை வாங்கி வைத்துக் கொண்டு கேட்பவர்களுக்கு விநியோகித்து வருகின்றனராம்.
இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மது அருந்த டாஸ்மாக் கடைகளுக்குப் போவதை நிறுத்தி விட்டனர். வீடு தேடி வரும் மது வகைகளை ரசித்து, ருசித்து அருந்தி வேட்பாளர்களை வாழ்த்தி வருகிறார்களாம்.
இதுவரை ஜனநாயகத்தை கொலைதான் செய்து வந்தார்கள். இப்போது சித்திரவதை செய்து படுகொலை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications