திருச்சி இடைத் தேர்தலில் காங். ஓட்டு யாருக்கு என்பது தொண்டர்களுக்குத் தெரியும்-தங்கபாலு
மதுரை: திருச்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. கூட்டணி தர்மத்தை மதித்தே அந்த நடவடிக்கையை எடுத்தோம். எனவே அங்கு யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது தொண்டர்களுக்குத் தெரியும் என்று புரிந்தும் புரியாததுமாக பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
மதுரை வந்த தங்கபாலு அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கூட்டணி தர்மத்திற்காகவே நாங்கள் திருச்சியில் போட்டியிடவில்லை. அதேசமயம், உள்ளாட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடும் நிலை ஏற்பட்டது. அதுவும் கூட கட்சியை வலுப்படுத்தவே உதவும் என்பதால் தனித்துப் போட்டியிடுகிறோம்.
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்க்கு மட்டும்தான் காங்கிரசுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்து வருகிறோம். திருச்சி இடைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தெரியும்.
இனி மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் அமையும். இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். அதற்கு முன்னோட்டம்தான் இந்தத் தேர்தல்.
காங்கிரஸின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் கொள்கையுடையவர்களை காங்கிரசில் இணைய வரவேற்போம். காங்கிரஸ் தலைமையில் இனி தேர்தலைகளை எதிர்கொள்வோம் என்றார் அவர்.
கூட்டணி தர்மம் என்று பேசிய தங்கபாலு, யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது தொண்டர்களுக்குத் தெரியும் என்று கூறி விட்டு, இனிமேல் காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி என்று கூறியிருப்பது பெரும் குழப்பமாகவே உள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications