தேர்தல் அதிகாரிகள் மீது ஆளுநர் ரோசைய்யாவிடம் திமுக புகார்
சென்னை: தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தமிழக ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து புகார் மனு கொடு்கக திமுக திட்டமிட்டுள்ளது.
வரும் 17, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. பெரும்பாலான கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கட்சித் தலைவர்கள் ஊர், ஊராகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை சுமூகமாக நடத்தத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் திமுக குழு இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து தேர்தல் அதிகாரிகள் மீது புகார் கொடுக்கவிருக்கிறது.
தேர்தல் அதிகாரிகள் திமுகவினரைப் புறக்கணிப்பதாகவும், பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் மா. சுப்பிரமணியன், ஜே.அன்பழகன் உள்பட 200 கவுன்சிலர் வேட்பாளர்கள் கொண்ட குழு ஆளுநரை சந்திக்கவிருக்கிறது என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications