ஆவடியில் ஓட்டு சேகரிக்க சென்றவர்களிடையே மோதல்: ஒருவர் காயம்
சென்னை: சென்னை ஆவடியில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க சென்ற 2 கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டு, போலீசார் வந்து சமாதானப்படுத்தினர்.
சென்னை, ஆவடியில் உள்ள வெள்ளனூரா பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் ராஜ்விக்னேஷ்வர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இதில் செந்தில்குமாருக்கு ஆதரவாக தலசையா என்பவரும், ராஜ்விக்னேஷ்வருக்கு ஆதரவாக பழனி என்பவரும் ஓட்டு சேகரித்து வருகின்றனர். ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள 2 பேரும் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்தவர்கள். இந்நிலையி்ல் பழனியிடம் உள்ளூரை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படாமல் இருப்பது குறித்து தலசையா கேட்டுள்ளார்.
இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைக்கலப்பாக மாறியது. இதில் பழனிக்கு காயம் ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த வேட்பாளர் ராஜ்விக்னேஷ்வர், அவரது ஆதரவாளர்கள் 200 பேருடன் வந்து கன்னடபாளையம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த, ஆவடி உதவி கமிஷனர் மனோகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலசையாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பழனியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications