திருச்சியில் பால் நிறுவனம் அனுப்பிய ரூ. 31 லட்சம் பணம் சிக்கியது- தேர்தல் அதிகாரிகள் விசாரணை
திருச்சி: திருச்சி அருகே நடந்த வாகனச் சோதனையின்போது காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 31 லட்சம் பணம் சிக்கியது. அந்தப் பணத்தை ஆவின் பால் நிறுவனத்துக்கு அனுப்பியதாக கார் டிரைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது வாக்காளர்களுக்குக் கொடுக்க அனுப்பப்பட்ட பணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து கடைசிக் கட்ட வாக்கு சேகரிப்பு சூடு பிடித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே வாகனச் சோதனையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வழக்கம் போல பெருமளவில் பணமும் சிக்கியுள்ளது. இவை வாக்காளர்களுக்காக கொடுக்க கொண்டு வரப்பட்ட பணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் ஒரு காரை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ 31 லட்சம் பணம் இருந்தது. காரை ஓட்டி வந்த நேதாஜி என்பவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்தபோது திருச்சியில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு, விஜய் பால் நிறுவனம் கொடுத்தனுப்பிய பணம் இது என்றார். இருப்பினும் அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை.
பணத்தைப் பறிமுதல் செய்த அவர்கள் நேதாஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications