ரயில்கள் எல்லாம் 'புல்': தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க 1500 சிறப்பு பஸ்கள்

தீபாவளிப் பண்டிகை வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் 23ம் தேதி முதல் பெரும்பாலான ரயில்கள், அரசு-தனியார் பஸ்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.
கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. ஆனால், அவையும் உடனடியாக நிரம்பி வருகின்றன.
இதனால் 24, 25ம் தேதிகளில் சிறப்பு பஸ்களை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழங்கள் திட்டமிட்டுள்ளன. சென்னை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும், பிற நகர்களில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னையிலிருந்து மட்டும் வழக்கமாக செல்லக்கூடிய 850 பஸ்கள் தவிர கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
பிற போக்குவரத்து கழகங்களும் நூற்றுக்கணக்கில் சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளன. மொத்தத்தில் மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1,500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இதில் விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 450 சிறப்பு பஸ்களும், சேலம் போக்குவரத்துக் கழகம் சார்பில் 145 சிறப்பு பஸ்களும், மதுரை போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகளும், கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் 200 சிறப்பு பஸ்களும், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன.
அதே போல தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்களும் கூடுதலாக நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்கவுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications