சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்த தயாநிதி வீட்டு வாட்ச்மேன்!
சென்னை: முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டுக்கு சோதனை நடத்த வந்த சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் போட் கிளப் முதல் அவென்யூ வீட்டில் ரெய்ட் நடத்த காலை 6.30 மணிக்கு அதிகாரிகள் வந்தனர்.
டெல்லி சிபிஐ துணை எஸ்.பி. ரவி கம்பீர் தலைமையில் ஒரு பெண் உள்பட 6 அதிகாரிகள் கொண்ட டீம் தயாநிதியின் வீட்டுக்கு வந்தனர்.
கதவைத் திறக்குமாறு வாசலில் நின்ற காவல்காரரிடம் கேட்டனர். ஆனால் அவர் திறக்க மறுத்து விட்டார்.
அரை மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள், மீண்டும் வாட்ச்மேனிடம் கதவைத் திறக்கச் சொல்ல, நீங்கள் ரெய்ட் நடத்துவது தொடர்பாக எங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை என்று பதில் வந்துள்ளது.
அப்போது வேலைக்காரர் ஒருவர் தயாநிதி வீட்டுக்கு வந்தார். அந்த வேலைக்காரரை மட்டும் கேட்டை திறந்து வீட்டுக்குள் விட்ட வாட்ச்மேன் சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்தார்.
இதையடுத்து கதவை உடனடியாகத் திறக்காவிட்டால், உன்னை கைது செய்வோம் என அதிகாரிகள் மிரட்டவே, வாட்ச்மேன் கதவைத் திறந்தார்.
இதையடுத்து 7.35 க்கு சிபிஐ அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். இந் நிலையில் 10.30 மணியளவில் திமுக தலைவரின் மகன் மு.க.தமிழரசு அந்த வீட்டுக்கு வந்தார். அவரை அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர்.
மிக அமைதியான போட் கிளப் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த விவரம் தெரிந்தவுடன் ஏராளமான பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி சேனல்களின் வாகனங்களும் குவிந்துவிட, அந்தப் பகுதியே பெரும் பரபரப்புக்குள்ளானது.
மேலும் ரெய்ட் நடப்பது தெரிந்து திமுக பிரமுகர்களும் கார்களில் வந்து குவிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஈடுபட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications