மின்சார ரயிலில் அரக்கோணம் மாணவி சென்னைக்குக் கடத்தல்- இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: அரக்கோணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி மின்சார ரயிலில் சென்னைக்குக் கடத்த முயன்ற நபரை சக பயணிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ஹேமா. இவர் அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் ஒரு இளைஞர் நட்பாக பழகியுள்ளதாக தெரிகிறது. அவர் ஏதோ ஆசை வார்த்தை கூறி ஹேமாவை மின்சார ரயிலில் அழைத்துச் சென்றார்.

ரயிலில் ஏறிய பின்னர்தான் தன்னை அந்த நபர் சென்னைக்கு அழைத்துச் செல்வதை அறிந்தார் ஹேமா. இதையடுத்து தன்னை கடத்திச் செல்வதாக கூறி அவர் கூச்சல் போட்டார். இதையடுத்து சக பயணிகள் அந்த இளைஞரை பிடித்துக் கொண்டனர். பின்னர் திருவள்ளூர் வந்ததும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் ஹேமாவை மீட்டனர். அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

படு துணிகரமாக மின்சார ரயிலில் பட்டப் பகலில் பள்ளி மாணவியை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+