கூடங்குளம் போராட்ட பின்னணியில் சந்தேகம்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
நாகர்கோவில்: கூடங்குளம் போராட்டத்தின் பிண்ணனியில் தனக்கு சந்தேகம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
குமரி மாவட்டத்தில் காங்கிரசுக்கு எப்போதுமே செல்வாக்கு உண்டு. 1967ல் காமராஜரை வெற்றி பெற வைத்து காங்கிரஸ் கோட்டை என்பதை இந்த மாவட்டம் நிரூபித்தது. கடந்த தேர்தலில் சேராதவர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்ததால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அப்போதும் இந்த மாவட்டத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.
தயாநிதி, கலாநிதி மாறன் வீடுகளில் சிபிஐ நடத்திய ரெய்டு வழக்கமானது. சட்டத்திற்கு உட்பட்டு சோதனை நடந்துள்ளது. இதில் கருத்து கூற எதுவும் இல்லை. தமிழகத்தில் நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர்களும், திமுக பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர். ஏழைகளின் நிலத்தை அபகரித்தால் தண்டனை அனுபவித்து தான் தீர வேண்டும்.
அதிமுக அரசு ஆரம்பத்தில் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் சமச்சீர் கல்வியில் ஏற்பட்ட குழப்பம், பல மணி நேரம் மின்தடை போன்றவைகளால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டு இப்போது உற்பத்தி ஆரம்பிக்கும் நிலையில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்களின் அச்சத்தைப் போக்கு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை அரசு அளிக்க வேண்டும்.
மத்திய அரசு இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். மேலும் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 900 மெகா வாட் மின்சாரம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
திட்டங்கள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது ஏற்படாத பிரச்சனை இப்போது ஏற்பட்டது ஏன், இந்த போராட்டத்தின் பிண்ணனியில் எனக்கு சந்தேகம் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு அணுமின் நிலையம் குறித்த அச்சத்தை போக்குவதில் மாநில அரசுக்கு பங்கு இல்லை என்பது போல் பேசக் கூடாது. மத்திய அரசுக்கு இருக்கும் பங்கை போல மாநில அரசுக்கும் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கடமை இருக்கிறது என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications