அமைதியாக நடந்து முடிந்தது இடைத் தேர்தல் வாக்குப் பதிவு: திருச்சி மேறகில் 61% ஓட்டுப் பதிவு
அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி, திமுக சார்பில் கே.என்.நேரு உள்பட மொத்தம் 16 வேட்பாளர்களுடன் இடைத் தேர்தல் களம் களை கட்டியிருந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் என எந்த பிற அரசியல் கட்சியும் பங்கேற்கவில்லை.
அனல் பறக்க நடந்த தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
மக்களிடம் ஆர்வம் இல்லை
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இருந்த அளவுக்கு இந்த முறை விறுவிறுப்பு இல்லை. காலையிலிருந்தே மந்த கதியில்தான் வாக்குப் பதிவு நடந்தது. பிற்பகல் வாக்கில்தான் சற்று வேகம் பிடித்தது.
இருப்பினும் மாலையில் மீண்டும் வாக்குப் பதிவில் தேக்க நிலை காணப்பட்டது. இதனால் பெரிய அளவிலான வாக்குப் பதிவு சதவீதத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவுக்கு வாக்குப் பதிவின்போது கிட்டத்தட்ட 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. துல்லியான வாக்குப் பதிவு விவரம் பின்னர் தெரிய வரும். 5 மணிக்கு முன் வந்து வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. அவர்கள் முழுமையாகவாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.
உறையூரில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு
உறையூரில், கிழக்கு மாநகராட்சி அரசுப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வேறு இயந்திரம் பொருத்தப்பட்டு பின்னர் வாக்குப் பதிவு தொடர்ந்தது. இதனால் சற்று நேரம் தாமதம் ஆனது.
அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு இல்லை
அதிமுக வேட்பாளர் மு.பரஞ்சோதிக்கு இந்த தொகுதியில் ஓட்டு இல்லை என்பதால் அவர் இன்று ஓட்டளிக்கவில்லை. பரஞ்சோதி, ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்தவர். அங்குதான் அவரது வீடும், ஓட்டும் உள்ளது. இதனால்தான் அவரால் அவர் போட்டியிடும் திருச்சி மேற்குத் தொகுதியில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது.
தொகுதிக்குப் பக்கத்தில் இருந்தும் ஓட்டு இல்லாததால் போட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் பரஞ்சோதி.
ஓட்டுப் போட்டார் கே.என்.நேரு
திமுகவேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மக்கள் மன்றம் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செல்வராஜும் வாக்களித்தார்.
அதேபோல மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக எம்.பி. குமார் ஆகியோரும் வாக்களித்தனர்.
திருச்சி மேற்குத் தொகுதியில் மொத்தம் 2,08,247 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை 1,02,924 பேர் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 1,05,497 பேர். 6 திருநங்கைகளும் உள்ளனர்.
20ம் தேதி வாக்கு எண்ணிக்கை
மொத்தம் 240 வாக்குச் சாவடிகள் வாக்குப் பதிவுக்காக அமைக்கப்பட்டன. அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு அங்கெல்லாம் 6 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
20ம் தேதி இங்கு பதிவாகும் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்













Click it and Unblock the Notifications