திருச்சி மேற்குத் தொகுதியில் ஓட்டுப் போட்ட பின் கோர்ட்டுக்குப் போய் கையெழுத்திட்ட நேரு
திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போட்ட முன்னாள் அமைச்சரும், திமுகவேட்பாளருமான கே.என்.நேரு அதன் பின்னர் கோர்ட்டுக்குப் போய் கையெழுத்துப் போட்டார்.
திருச்சி மேற்குத் தொகுதிக்கு இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கே.என்.நேரு மக்கள் மன்றம் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவரைப் பார்த்த பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், பழைய சிரிப்பைக் காண முடியவில்லையே, சிரித்தபடி போஸ் கொடுங்கள் என்றுகேட்டனர். அதற்கு நேரு, இன்னும் 40 நாள் இருந்தால்தான் சிரிப்பதா, இல்லையா என்பது தெரியும் என்றார்.
கடந்த தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரியம் பிச்சை 77,492 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நேரு 70,313 வாக்குகள் பெற்றார். 7179 வாக்குகள் வித்தியாசத்தில் நேரு தோற்றுப் போனார்.
எனவே இந்த முறை எப்படியும் வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கையில் திமுகவினர் உள்ளனர். அதேசமயம், நேருவின் நில அபகரிப்புகளை அதிமுக அரசு அம்பலப்படுத்தியிருப்பதாலும், திருச்சியில் நேருவுக்கு எதிரான அலை வீசுவதாலும், அதிமுகவே வெற்றி பெறும் என்று வேட்பாளர் பரஞ்சோதி தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுக, திமுக பெற்ற வாக்குகள் விவரம்:
மொத்த வாக்குகள் - 2,05,622
பதிவான வாக்குகள் - 1,54,322
மரியம்பிச்சை (அ.தி.மு.க) - 77,492
கே.என்.நேரு (தி.மு.க) - 70,313
அரசின் மீதான தீர்ப்பாக பார்க்கப்படும் என்பதால், தேர்தல் முடிவு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் அதிமுகவினர் மிகத் தீவிரமாக களப் பணியாற்றியுள்ளனர். இதனால் தேர்தல் முடிவு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோர்ட்டுக்குப் போய் கையெழுத்து
தேர்தலில் வாக்களித்த பின்னர் கே.என்.நேரு அங்கிருந்து திருச்சி கோர்ட்டுக்குச் சென்றார். அங்கு கோர்ட் உத்தரவுப்படி அவர் கையெழுத்திட்டார். அதேபோல அவரது தம்பி ராமஜெயம், திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications