சீத்தாப் பழச் சின்னத்தை எப்படி வாக்காளர்களிடம் பிரபலப்படுத்துவது? ஒரு சுயேச்சதையின் புலம்பல்!

சண்டையில் கிழியாத சட்டையா என்று ஒரு படத்தில் வடிவேலு கேட்பார். அதேபோல சுயேச்சைகள் இல்லாமல் தேர்தலா என்று ஆகி விட்டது. டெபாசிட்டின் நிழலைக் கூட பார்க்க முடியாது என்று 200 சதவீதம் உறுதியாகத் தெரிந்தும் கூட சட்டசபை, லோக்சபா தேர்தலில் ஏகப்பட்ட சுயேச்சைகள் போட்டியிடுவார்கள். எதற்காக இந்த ஆசை என்று கேட்டால் எல்லாம் ஒரு விளம்பரம்தான் என்று செந்தில் பாணியில் அவர்களிடமிருந்து பதில் வரும்.
அந்தத் தேர்தலுக்கே நிறைய சுயேச்சைகள் களம் குதிக்கும்போது உள்ளாட்சித் தேர்தலை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன.? இப்போதும் பல ஆயிரக்கணக்கான சுயேச்சைகள் களத்தில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஜெயிப்பது கஷ்டம் என்று தெரிந்தும் கூட இவர்களுக்கு சின்னம் குறித்த பெரும் கவலை வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு சுயேச்சைக்கும் வித்தியாசமான சின்னத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். பல சின்னங்களை எளிதில் பிரபலப்படுத்தி விட முடிகிறது. ஆனால் பல சின்னங்களை மக்களிடம், குறிப்பாக பாமர மக்களிடம் புரிய வைக்க முடியாத நிலை இருப்பதாக சுயேச்சைகள் புலம்புகின்றனர்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் வெங்கடேசன் என்ற சுயேச்சை வேட்பாளர் போட்டியிடுகிறார். இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் சீத்தாப் பழம். இதை பிட் நோட்டீஸில் வரைந்து விநியோகித்து ஓட்டு கேட்டு வருகிறார் வெங்கடேசன். ஆனால் தனது சின்னம் பலருக்கும் புரியவில்லை என்று அவர் ஆதங்கப்படுகிறார்.
இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில்,எனக்கு மிகவும் தாமதமாகத்தான் சின்னத்தை ஒதுக்கினர். அதிலும் சீத்தாப் பழச் சின்னத்தைக் கொடுத்து விட்டனர். இதை எப்படி வரைந்தாலும் பார்த்தவுடனேயே புரிகிறது போல இல்லை. மிகவும் குழப்பமாக உள்ளது. இதைப் பார்க்கும் யாருக்குமே சின்னம் என்ன என்பது தெரியவில்லை. நான் விளக்கிச் சொல்லி ஓட்டுக் கேட்டு வருகிறேன் என்றார் குமுறலுடன்.
இன்னொருவருக்கு பதக்கம் சின்னத்தைக் கொடுத்து விட்டனர். அவரது பெயர் ராமசாமி. மதுரை மேயர் தேர்தலுக்குப் போட்டியிடுகிறார். தனது டூவீலரில் சின்னதாக ஒரு போஸ்டரை அடித்து முன்பக்கம் மாட்டிக் கொண்டு சபாரி சகிதம் வாக்கு வேட்டையாடி வருகிறார். ஒவ்வொரு வீடாக வண்டியை நிறுத்தி உள்ளே போய் தனக்கு வாக்களிக்குமாறு பணிவன்புடன் கேட்டு வருகிறார்.
அவர் கூறுகையில், என்னைப் போன்ற சுயேச்சைகளுக்கு சின்னத்தை விளக்குவதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. எனது சின்னத்தை விளக்க முடியாமல தவிக்கிறேன். மேலும், போஸ்டர் அடிக்கவோ, பேனர் கட்டவோ அனுமதி கிடையாது என்கிறார்கள். எனவே நானே வண்டியில் போய் ஓட்டு வேட்டையாட வேண்டியுள்ளது.
மதுரையில் முன்பு 72 வார்டுகள்தான் இருந்தது. இப்போது 100 வார்டுகளாக்கி விட்டனர். கிட்டத்தட்ட 10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தனை பேரையும் போய்ப் பார்ப்பது என்பது இயலாத காரியம் என்றார் வேதனையுடன்.
அதேசதமயம், கைப் பம்பு, தண்ணீர்க் குழாய், தீப்பெட்டி, ரோடு ரோலர் போன்ற சின்னங்களைப் பெற்றவர்கள் சற்று மகிழ்ச்சியுடன் உள்ளனர். காரணம்,தங்களது சின்னங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதால். சென்னை அருகே பல்லாவரம் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ரோடு ரோலர் சின்னம் தந்துள்ளனர். அவர் ஒரு ரோடு ரோலரை வாடகைக்கு எடுத்து அதில் அமர்ந்து கொண்டு வித்தியாசமாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். அவரைத் தாண்டி முக்கியக் கட்சிகளின் ஆட்டோக்கள் மைக்குகளை கட்டிக் கொண்டு சிட்டாகப் பறக்க,இந்த வேட்பாளரோ படு சாவாதனமாக, நிதானமாக 'கடபுடா கடபுடா'வென்று ஓட்டு வேட்டையாடியது பார்க்கவே வித்தியாசமாக உள்ளது.
மொத்தத்தில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் சிக்கலான சின்னத்தைப் பெற்ற சுயேச்சைகள் சோகமாகவும், ஜாலியான சின்னத்தைப் பெற்றவர்கள் சற்றே சந்தோஷத்துடனும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications