உற்சாகத்தை அள்ளி கொடுத்த உள்ளாட்சி தேர்தல்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் திருவிழா முடிந்து சுமார் 160 நாட்களை கடந்து தற்போது மீ்ண்டும் உற்சாகத்தை அள்ளி கொடுக்கும் உள்ளாட்சி தேர்தல் 17, 19 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதால் தமிழக தெருக்களிலும், கிராமங்களிலும் திருவிழாக் கோலமாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்படைந்தன. சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் உதிரி பூக்களை போல் தனித்தனியே வாசம் வீசவும், வாடி போகவும் ஏன் உள்கட்சி பூசலால் ஆடிப்போகும் நிலையும் ஏற்பட்டு இன்று தேர்தல் களத்தில் கங்கணம் கட்டிக்கொண்டு களப்பணிகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் கூட்டணிகள் இல்லாததாலும் சொந்த பலம் இருப்பதை கொண்டு ஆளும்கட்சியிலும் ஏற்கனவே ஆண்ட கட்சியிலும் சீட் கிடைக்காதவர்கள் தனித்து சுயேட்சையாகவும் களத்தில் உள்ளனர்.
இக்கட்சிகளில் ஒரு பிரிவினர் நமக்கு சீ்ட் கிடைக்கவில்லையே என்ற மனக்குமுறலோடு சீட் கிடைத்த வேட்பாளர்களை செல்லாக்காசாக்கிடும் முயற்சியிலும் முயன்று வருகின்றனர். மற்றொரு பக்கம் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் தலைவர், உறுப்பினர் தேர்தலில் உறுப்பினருக்கு எனக்கு ஓட்டு போடுங்க, தலைவர் பதவிக்கு யாருக்கு வேனாலும் போடுங்க என்ற உள்குத்து பிரச்சாரத்திலும் களத்தில் உள்ளனர்.
மேலும் கடந்த 10 நாட்களாக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகமெங்கும் மாநகரம், நகரம், கிராமப்பகுதிகளில் சூடுபிடித்துள்ளதால் வயல் வேலை உள்ளிட்ட கூலி வேலைக்குப் போகும் ஆட்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. காரணம் காலையில் வேட்பாளருடன் பிரச்சாரம் செய்ய போகும் ஆண், பெண்களுக்கு கூலி ரூ.100ம் மாலையில் பிரச்சாரம் போகிறவர்களுக்கு ரூ.100ம் கூலி வழங்கப்படுகிறது.
ஆளும் கட்சியினர் குறைந்தது 50 முதல் 100 பேருடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆண்ட கட்சியினர் (திமுக) சில இடங்களில் மட்டும் இதுபோன்று போட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழத்தில் இறுதி கட்ட பிரச்சாரம் 15ம் முதல் கட்டமாகவும், 17ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் முடிவதால் வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தேர்தல் திருவிழாவால் ஓரு குடும்பத்தில் தலா 2 பேர் முதல் 3 பேர் வரை காலை, மாலை பிரச்சாரம் செய்ய போனால் ரூ.600 வரை கிடைத்து விடுகிறது. 15ம் தேதி வரை பிரச்சாரத்திறக்கு கூலி ஆளாக செல்லும் வாக்காளர்களுக்கு 3 ஆயிரம் வரை சம்பளம் கிடைத்துள்ளதால் நகர்புறங்களிலுள்ள ஜவுளிக்கடைகளிலும் நல்ல விற்பனையாம். மேலும் அரசு மதுபான கடைகளிலும் விற்பனை வெளுத்து வாங்குகிறது.
நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி வார்டு வாக்காளர்களுக்கு வைட்டமின் 'ப'வை வாரியிறைக்க இரு திராவிட கட்சிகளும் ஏகப்பட்ட வழிகளைக் கையாண்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆளும் கட்சி தொண்டர்களுக்கு, பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தவணை முறையில் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். முதல் தவணையை கொடுத்து விட்டனர். 2வது கட்ட தொகையை தற்போது கொடுத்துள்ளனராம். இன்னும் 2 கட்ட பணப் பட்டுவாடா இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் சூடு குறையாமல் வேலை பார்த்து வருகின்றனர்.
இப்படி அமர்க்களப்படும் உள்ளாட்சித் தேர்தலில், வழக்கம் போல, கறி விருந்துகள், தீபாவளி பரிசுகள், என பலதரப்பட்ட அன்பளிப்புகளும் களை கட்டி தமிழகமே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications