சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி போதை பொருளுடன் இலங்கை வாலிபர் கைது
சென்னை: சென்னை விமான நிலையம் வழியாக இலங்கைக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று 9.30 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் இலங்கை விமானத்தில் போதை பொருள் கடத்த போவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அப்போது இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த தனியார் விமானத்தில் பயணிக்க வந்த ஒரு பயணியிடம் போதை தடுப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரிடம் இருந்த பையில் 4 காகித பொட்டலங்கள் இருந்தது. ஒவ்வொன்றும் அரை கிலோ எடை கொண்டதாகவும், கருப்பு நிற காகிதத்தால் சுற்றப்பட்டதாகவும் இருந்தது.
அந்த பொட்டலங்களை அதிகாரிகள் பிரித்து பார்த்த போது, அது போதை பொருள் என்பது தெரிந்து. அவரை கைது செய்த போலீசார், 2 கிலோ அளவுள்ள அந்த போதை பொருளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்த முகமது அன்சார் என்பது தெரிந்தது.
இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்த முகமது அன்சார், இங்கிருந்து இலங்கைக்கு போதை பொருளை கடத்த முயன்றது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த போதை பொருள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications