கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி துவங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெல்லை: கூடன்குளம் அணுமின் நிலையம் பணிகள் சம்பந்தமாக பீதியை கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை கலெக்டர் செல்வராஜிடம், தூத்துக்குடி ராம்டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் காசிவேலு கோரிக்கை மனுக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து காசிவேலு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கூடன்குளம் அணுமின் நிலையம் தேச நலனுக்கும், மக்கள் நலனுக்கும் அத்தியாவசியமானது என்பதை உறுதியுடன் நம்புகிறோம். ஆனால் அணுமின் நிலையத்தின் மீது சிலர் புகார்களை குவித்து மக்களிடையே பீதியை கிளப்புகின்றனர். இதனால் இடிந்தகரையில் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடன்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமாக ஜனநாயக உரிமையை தவறாய் பயன்படுத்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.வழிபாட்டு வளாகத்தை உண்ணாவிரதத்திற்கு அனுமதிக்க கூடாது. பீதியை கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் அனுமதியில்லாமல் பள்ளி குழந்தைகளை திரட்டி உண்ணாவிரதத்தில் பங்கேற்க வைத்த நபர்கள் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பை உறுதி செய்து உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications