லட்சத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட 8 குமரி மீனவர்கள் விடுவிப்பு
கருங்கல்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக லட்சத்தீவு அருகே சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் 8 பேரும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்திய பிறகு படகுடன் விடுவி்க்கப்பட்டனர்.
கொல்லங்கோடு வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்குச் சொந்தமான செல்வமாதா மீன்பிடி விசைப்படகில் வள்ளவிளையை சேர்ந்த ஜெகன், சேவியர், தோமஸ், அவுசேப், கிளாபின், விஜயன், குறும்பனையை சேர்ந்த பிரபு, பொழியூரை சேர்ந்த ஜான்சன் ஆகிய 8 பேரும் ஆழ்கடலில் மீன்படிக்க சென்றனர்.
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 24ம் தேதி தொழிலுக்கு சென்ற இவர்கள் ஆழ்கடலில் சில நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு 8ம் தேதி கரைக்கு திரும்பினர். இந்நிலையில் லட்சத்தீவு மரைன் போலீசார் இந்திய கடல் எல்லையை தாண்டியதாக இவர்களை பிடித்து போலீஸ் காவலில் வைத்து, படகையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மீனவர்கள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உறவினர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி நடவடிக்கை எடுக்குமாறு குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஹெலன் டேவிட்சன் எம்.பி., மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத்பவார் ஆகியோர் லட்சத்தீவு மீன்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விரைவில் குமரி மாவட்டம் வரவிருக்கின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications