தனது ஓட்டை அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதால் கோபம்-வாக்குச் சீட்டுடன் ஓடிய வேட்பாளர் கைது
கோபிச்செட்டிப்பாளையம்: அதிமுகவினர் தனது ஓட்டையே கள்ள ஓட்டுப் போட்டு விட்டதால் கடும் கோபமடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்குச் சீட்டுக்களை அள்ளிக் கொண்டு ஓடினார். இதையடுத்து அவரை போலீஸார் விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர்.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் கணேசன். இவர் இன்றுகாலை ஓட்டுப் போடச் சென்றபோது ஏற்கனவே நீங்கள் ஓட்டுப் போட்டுவிட்டீர்கள் என தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட கணேசன் அதிர்ச்சி அடைந்தார். நானே வேட்பாளர், எனது ஓட்டையே கள்ள ஓட்டுப் போட்டு விட்டார்களா என்று கடுப்புடன் கூறினார்.
பின்னர் அதிமுகவினர்தான் இதற்குக் காரணம் என்றுகோபமாக கூறிய அவர் திடீரென அங்கிருந்து வாக்குச் சீட்டுக்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். இதைப் பார்த்த போலீஸார் அவரை விரட்டிப் பிடித்துக் கைது செய்து வாக்குச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொண்டையம்பாளையத்தில் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications