காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil

ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி அமைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குசாவடியில், முன்னாள மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை வாக்களித்தார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன், ஈரோட்டில் மக்கள் அதிக உற்சாகத்துடன் வாக்களித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் இதே நிலையில் தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், நல்லவர்களுக்கு வாக்களிப்பார்கள்.
இந்த தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் நினைத்ததை விட, காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன், என்றார்.












Click it and Unblock the Notifications