திமுகவினரால் தாக்கப்பட்டதால் அவமானம்- சுயேச்சை வேட்பாளர் விஷம் குடித்தார்
வேலூர்: திமுகவினரால் தாக்கப்பட்டதால் மன வேதனை அடைந்த சுயேச்சை வேட்பாளர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் கங்கைநல்லூர் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பி்ல மகாலிங்கம் என்பவரும், சுயேச்சையாக விநாயகம் என்பவரும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களுக்கிடையே வேட்பு மனு தாக்கலிலிருந்தே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாலிங்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை விநாயகம் ஆதரவாளர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவினர் திரண்டு வந்து விநாயகத்தை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார்.
திமுகவினரால் தான் தாக்கப்பட்ட தகவல் ஊரெல்லாம் பரவியதால் அவமானமடைந்தார் விநாயகம். இதையடுத்து அவர் விஷம் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் வயிறு வலிக்கவே பொறுக்கமுடியாமல் 108 ஆம்புலன்ஸுக்கு அவரே போன் செய்தார். அவர்கள் விரைந்து வந்து விநாயகத்தை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு விநாயகத்தின் ஆதரவாளர்கள் திரண்டு விட்டனர். பின்னர் அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். விநாயகம் ஆதரவாளர்கள் கோபத்துடன் இருப்பதால், கங்கைநல்லூரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே!












Click it and Unblock the Notifications