சென்னையில் குழப்பம்- பலருடைய பெயர்கள் நீக்கம்- வாக்காளர்கள் கொந்தளிப்பு- வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள

அதேபோல பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வெப் காமராக்கள் பொருத்தப்படவில்லை. வீடியோ பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு இன்று வாக்குப் பதிவு நடந்தது. 200 வார்டுகளிலும் தேர்தல் காலையில் வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்களிக்க வாக்காளர்கள் பெருமளவில் திறண்டு வந்திருந்தனர். ஆனால் பல பகுதிகளில் பெருமளவிலான பெயர்கள் விடுபட்டுப் போய் விட்டதாக வாக்காளர்கள் குற்றம் சாட்டினர். இதனால் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பல வாக்குச் சாவடிகளில் முட்டல் மோதல் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வீடியோ பதிவுக்கும், வெப் காம் பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில வாக்குச் சாவடிகளில் மட்டுமே இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், வாக்காளர்கள் பெயர் விடுபட்டது குறித்து விசாரணை நடத்தப்படும். பெயர் விடுபட காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இருப்பினும் வாக்காளர்கள் முன்பே தஙக்ளது பெயர்கள் இருக்கிறதா என்பதை சரி பார்த்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என்றார்.
கிட்டத்தட்ட சென்னை நகரின் அனைத்துத் தெருக்களிலுமே சிலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கபப்ட்டது பெரும் குழப்பத்தையும, சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த தங்களது பெயர்கள் இப்போது நீக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட சதி என்று பெயர் விடுபட்ட வாக்காளர்கள் குமுறுகின்றனர். மேலும் பூத் சிலிப்புகளையும் தேர்தல் ஆணையம் முறையாக வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர் அவர்கள்.
இந்த குழப்பங்கள் காரணமாக சென்னை மாநகராட்சித் தேர்தலில் அசாதாரணமான சூழ்நிலை காணப்படுகிறது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications