ராமநாதபுரத்தில் காங்கிரஸ்- பாஜகவினர் கல்வீசி மோதல்: தடியடி நடத்திக் கலைத்த போலீஸ்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காங்கிரஸ்-பாஜக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
ராமநாதபுரம் நகராட்சி சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் கடைசி நேரத்தில் சிலர் கள்ள ஓட்டுப் போடுவதாக தகவல் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 25வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கோபி அங்கு சென்று பார்வையிட்டார். அதே போல பாஜக வேட்பாளர் குமாரும் அங்கு சென்றார்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அங்கிருந்த போலீசார் அவர்களை வெளியே அனுப்பி வைத்தனர்.
ஆனால் வெளியே சென்ற இரு தரப்பும் அரசு மருத்துவமனை முன்பு ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் சிலருக்கு மண்டை உடைந்தது. பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. முரளிதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications