பெங்களூர் மெட்ரோ ரயிலை ஓட்டப் போகும் விவசாயி மகள் பிரியங்கா- சைக்கிள் ஓட்டத் தெரியாதாம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வெளியே உள்ள ககலிபுராவைச் சேர்ந்தவர் பிரியங்கா(20). எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக் என்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளார். பெங்களூரில் மெட்ரோ ரயில் ஓட்டுநராக உள்ளார். மெட்ரோ ரயில் ஓட்ட வேண்டும் என்ற அவரது கனவு நனவாகியுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது,
நான் டெல்லியில் முதன்முதலாக மெட்ரோ ரயில் ஓட்டியபோது மிகவும் த்ரில்லாக இருந்தது. டெல்லியில் ஐந்தரை மாதங்கள் பயிற்சி பெற்ற பிறகே பெங்களூரில் ரயில் ஓட்டத் துவங்கினேன். ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து ரயிலை ஓட்டுவது ஒரு தனி அனுபவம்.
எனது தந்தை ஒரு விவசாயி. என் குடும்பத்தில் நான் தான் கடைக்குட்டி. ஆனால் நான் என் குடும்பத்தாரை விட அதிகமாக சம்பாதிக்கிறேன். சைக்கிளே ஓட்டத் தெரியாதவள் நம்ம மெட்ரோ ஓட்டுகிறாள் என்று எனது தாயார் அக்கம்பக்கத்தினரிடம் அடிக்கடி கூறுவார்.
பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். ரயிலை ஓட்டுகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2010ம் ஆண்டு மெட்ரோ ரயில் ஓட்டுநராக தேர்வு செய்யப்பட்டவர் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications