சென்னையிலிருந்து விமானம் மூலம் விரைந்து வந்து பெரியகுளத்தில் ஓட்டுப் போட்ட ஓ.பன்னீர்செல்வம்
பெரியகுளம்: பெரியகுளத்தில் தனது ஓட்டை பதிவு செய்ய விமானம் மூலம் சென்னையில் இருந்து பறந்து வந்தார் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். கொட்டும் மழையில் கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த அவர் தனது ஓட்டைப் பதிவு செய்தார்.
பெரியகுளம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியான ராஜா போட்டியிடுகின்றார். இவருக்காக கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்தார் பன்னீர்செல்வம். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
அதிமுக 40வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றதால், அந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை சென்றிருந்தார் பன்னீர் செல்வம். இதனால் அவர் ஓட்டுப் போட பெரியகுளம் வருவாரா, இல்லையா என்பதில் குழப்பம் இருந்தது. இருந்தாலும் அம்மா தலைமையில்நடந்த அதிமுக 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட கையோடு விமானத்தைப் பிடித்து மதுரை விரைந்தார் பன்னீர்செல்வம்.
பின்னர் அங்கிருந்து பெரியகுளம் விரைந்தார். ஒரு வழியாக வாக்குச் சாவடிக்கு அவர் வந்து சேர்ந்தபோது மணி 4.30. வாக்குப் பதிவு முடிய அரை மணி நேரமே இருந்த நிலையில் வந்து சேர்ந்த பன்னீர்செல்வத்தைப் பார்த்து அதிமுகவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அப்போது பெய்து கொண்டிருந்த அடை மழையையும் பொருட்படுத்தாமல், குடை புடை சூழ வந்து வாக்களித்தார் பன்னீர் செல்வம்.
இந்த சம்பவம்த்தை சுட்டிக் காட்டி, அண்ணன் எப்ப வருவார் எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு கரெக்டா வந்துடுவார் என அதிமுக-வினர் பன்ச் டயலாக் அடிக்கின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications