நாகையில் கியூவில் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் ஜெயபால்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அமைச்சர் ஜெயபால் சுமார் 1 மணிநேரம் காத்திருந்து வாக்களித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் நேற்று முதல் கட்டமாக நடைபெற்றது. இதில் நாகை 35வது வார்டை சேர்ந்தவர்களுக்கு கோட்டை மேட்டுத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி ஓட்டுச் சாவடியில் அமைக்கப்பட்டிருந்தது.
இங்கு காலை 9.30 மணிக்கு வாக்களிக்க தமிழக அமைச்சர் ஜெயபால் வந்தார். காலையில் வாக்களிக்க நீண்டவரிசை காணப்பட்டதால், ஒரு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று 10.35 மணி அளவில் தனது வாக்களித்தார். அமைச்சரின் இந்த எளிமையைக் கண்டு அங்கிருந்த பலரும், அவருக்கு புகழ்மாலை சூட்டினர்.












Click it and Unblock the Notifications